குடவாசல், ஜன. 22 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் உள்ள கோ சாலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மறைந்த தங்களின் பித்ருக்களின் ஆசியையும், கோமாதாவின் அருளையும் பெற வழிப்பட்டனர்.

திருவீழிமிழலையில் அமைந்திருக்கும் கோரக்ஷண சமிதி என்னும் கோசாலையில் வயது முதிர்ந்த நாட்டு பசுக்கள், காளை மாடுகள் உள்ளிட்ட ஏராளமான பசுக்களை பராமரித்து இச்சாலையில் வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு ஆண்டுதோறும், இந்துக்களின் முக்கிய நாட்களான ஆடி அமாவாசை, மகாளய அம்மாவாசை, தை அமாவாசை என ஆண்டின் முக்கிய அமாவாசைகளான இம் மூன்று அமாவாசைகளிலும் கோபூஜை நடைபெறுவது வழக்கமாக நடந்து வருகிறது.

மேலும், இந்த நாட்களில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், நமது முன்னோர்களின் ஆசியை பெறலாம் என்பது இந்துக்களிடையே ஐதீகமாக இருந்து வருகிறது.

மேலும், இந்நாளில் மறைந்த முன்னோர்களுக்காக சமைத்த உணவை அவர்களின் திருவுருவப் படங்களின் முன் படைத்து விட்டு, தொடர்ந்து காகத்திற்கு அவ்வுணவினை வைத்து பின் விரதமிட்டு சாப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் அதுப்போன்று பசுக்களுக்கு பூஜை செய்து உணவு அளித்தால் மற்றும் அகத்திக்கீரை போன்றவைகளையும் வழங்குவது இறை வழிப்பாட்டாளர்களிடம் காலம் காலமாக இருந்து வரும் செயல்பாடுகளாகும். மேலும் இவ்வாறு மற்ற ஜீவராசிகளுக்குப் படைக்கும் போது, அதன் வடிவில் தங்கள் முன்னோர்கள் தங்களிடம் வந்து அவ்வுணவினை பெற்றுச் செலவதாக மாறாத நம்பிக்கையுடனும், அதனால் தங்களுக்கு மன நிறைவும் ஏற்படுவதாக கருதியும் இச்செயல்களை செய்து வருகின்றனர்.

அவ்வகை அடிப்படையில் இந்த ஆண்டும் இத் தை அமாவாசை தினமான இன்று இக்கோ சாலையில் கோ பூஜை நடைபெற்று அனைத்து பசுக்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது. இதில் அகத்திக்கீரை, வாழைப்பழம், வெல்லம், பச்சரிசி உள்ளிட்டவைகளை அப்பசுமாடுகளுக்கு உணவாக வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கோ பூஜையில் கலந்து கொண்ட பெண்கள், ஆண்கள் அனைவரும் பசுக்களை சுற்றி வந்து  வணங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here