காஞ்சிபுரம், மே. 29 –

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட புத்தளி கிராமத்தில் இளைஞர்களை ஊக்கிவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டியை திமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் டாஸ் போட்டு, கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் வருகின்ற ஜீன் 3ஆம் தேதி கொண்டாடபடுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள்  மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்கவிக்கும் வகையில் போட்டிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என பலவற்றை திமுகவினர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட புத்தளி கிராமத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கவிக்கும் வகையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையேற்று டாஸ் போட்டு கிரிக்கெட் விளையாடி போட்டியினை துவக்கி வைத்தார்.

இந்த கிரிக்கெட் போட்டிக்கு மாவட்டம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சார்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலருக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் ,பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், உத்திரமேரூர் ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here