காஞ்சிபுரம், டிச. 25 –

விடுததை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் க.உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெல்லப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று மறைந்த உதயசூரியனின் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி,  சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சு.க.விடுதலை செழியன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் எழிலரசன், பாசறை  செல்வராஜ், வாலாஜாபாத் திமுக ஒன்றிய செயலாளர் சேகர் மற்றும் விசிக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here