காஞ்சிபுரம், செப் . 25 –

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் இடையிலான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கட்சியினரிடையே ஆலோசனை வழங்கி வருகிறார்.

இதில் அவர் பேசுகையில்,

அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தியது. அதில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் மக்களை ஆள வேண்டும் என முயற்சித்தோம். அனால் தற்போது திமுக அரசு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனுவை ஏதோ ஒரு காரணத்தை கூறி நிராகரிக்கிறார்கள் திட்டமிட்டு நிராகரிக்கிறார்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

5 சவரனுக்கு கீழ் வைத்திருத்ததால் நகை கடன் தள்ளுபடி என்றுதானே சொன்னீர்கள், ஆனால் குடும்பத்தில் ஐந்து பேரும் வைத்திருந்தால் தள்ளுபடி இல்லை எனை குறிப்பிட்டு சொன்னீர்களா? நீங்கள் சொன்னதை நம்பி மக்கள் ஏமாந்து நிற்கிறார்கள் ! நாற்பத்தி மூன்று லட்சம் பேர் 5 சவரன் நகை அடமானம் வைத்திருக்கிறார்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தான் 5 சவரன் நகையை ரத்து செய்யப்படும் என கூறி இருக்க வேண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் ஐந்து சவரன் நகை கடன் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் குடும்பத்தில் பலரும் அடமானம் வைத்த காரணத்தினால்தான் தவறு நடந்ததாக முதல்வர் கூறுகிறார். அது தவறான தகவல் தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக மட்டுமே எனக்கூறினார்.

மேலும் இதுவரை 52 லட்சம் மாணவர்களுக்கு 12,000 ரூபாய் மதிப்புடைய மடிக்கணினி மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக அதிமுக அரசு வழங்கியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விடும் என்பதற்கு தற்போது நடந்து வரும் தொடர் கொலைகளை சாட்சி !

பூத் ஏஜெண்டுகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே செல்லக்கூடாது ஏனென்றால் பெட்டியை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.எங்க உழைப்பு இருக்கிறதோ அங்கு வெற்றி நிச்சயம் ! :திமுக அண்ணாவின் கனவை நிறைவேற்ற தவறியதால்தான் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார். மக்களின் பிரச்சனையை எளிமையாக தீர்க்கும் கட்சி அதிமுக. இன்றைய சூழலுக்கு ஏற்றார் போல் அதிமுக வேலை செய்ய வேண்டும். வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று நாம் செய்ததை சொல்லி வாக்கு கேட்க வேண்டும்.

நீட் தேர்வை   ரத்து செய்யப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் அதை மறந்து விட்டார்கள். விவசாய கடன் ரத்துக்கு எதுவும் செய்யவில்லை. மக்களோடு தொடர்புடைய ஒரே துறை உள்ளாட்சி துறை தான். இத் தேர்தலோடு திமுகவின் தேர்தல் அறிவிப்புகள் முடிந்து விடும் இதையெல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என பொய் கூறி வருகிறார்கள். ஆனால் நாங்கள் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம்.  பல்வேறு கட்டுபாடுகளை விதித்து தற்போது தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக முடக்க பார்க்கிறது. அம்மா இருசக்கர வாகன திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள். முந்தைய அரசு கொண்டு வந்த திட்டத்தை முடக்குவது, விவசாயிகளை வஞ்சிப்பது இது தான் திமுக அரசு.

சரியான தலைமை இல்லாமல் நிர்வாகத்திறமையும் இல்லாமல் சட்டம் ஒழுங்கு இல்லாத ஆட்சி திமுக ஆட்சி சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது என இவ்வாறு அக்கூட்டத்தில் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here