காஞ்சிபுரத்தில் இயங்கும் பிரபல தனியார் ஓட்டலான ஸ்ரீரமணாஸ் நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் முதல் தர சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம், செப். 13 –

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில்  பொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்கும் வகையில் அவ்வப்போது உணவகங்கள்,  இனிப்பகம் ,  திருக்கோயில் மடபள்ளி உள்ளிட்டவைகளில் சமையல் கூடங்களில் சுகாதார முறை , பணியில் உள்ளோர் பயிற்சி  பெறுதல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்  ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் தர நிர்ணயத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை உணவுக் கட்டுப்பாட்டு துறையிடம் 23 ஆயிரத்து 418 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் ffsai சான்றிதழை 8806 பேர் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தலைமையிடமாகக் கொண்டு மூன்று இடங்களில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரமனாஸ் உயர்தர சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது.

இவ்வுணவகத்தில் உணவுக் கூடங்கள் , சமையல்கூடங்கள் , பயிற்சி பெற்ற உணவு பரிமாறுபவர்கள் அனைத்து பரிமாணங்களையும் சிறப்பாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து பல்வேறு கட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வில் 106 மதிப்பெண்கள் பெற்று முதல் தர சுகாதார மதிப்பீட்டு தர சான்றிதழை பெற்றுள்ளது.

இதற்கான சான்றிதழை இன்று காஞ்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா. ஸ்ரீ ரமணஸ் உரிமையாளர் குருவிடம் அளித்தார்.

இதே போல் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 திருக்கோயில் மடப்பள்ளி களுக்கும் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here