காஞ்சிபுரம், மார்ச். 05 –
காஞ்சிபுரத்தில் திறப்பு விழாவிற்கு காத்திருந்த புதிய மேம்பாலம் பொதுமக்களே திறந்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தனர். அதனை மீண்டும் போலீசார் மூடினார்கள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்புநிலவியது.
காஞ்சிபுரம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலாக இருந்து வந்தது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
தற்போது அந்த மேம்பாலம் பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றது. இன்று காலை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றிவுள்ள வாகனவோட்டிகள் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் அவதிக்குள்ளானர்கள்.
இதனால் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரயிவே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் நடைபெறுவதாக கூறி மேம்பாலத்தை போலீசார் மீண்டும் மூடினார்கள்இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை – பெங்களூர் சாலை செல்ல முடியாமலும் சென்னையில் இருந்து வரும் வாகன ஒட்டிகள் காஞ்சிபுரம் வர முடியாமலும் தவித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செல்லவும், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் சந்திப்பை கடக்க 5 கிலோ மீட்டர் தூரம் கூடுதலாக கடக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ரயில்வே கேட் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.