காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் திறக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் கோடை வெயிலில் தாகத்தை தீர்க்க தர்பூசணி பழம், வெள்ளரிப்பழம், பனை நுங்கு, கரும்பு ஜூஸ், கீரக்காய், கூழ், மோர், பழச்சாறு போன்றவை சாலை ஓர கடை போல் அமைத்து பந்தலில் இளநீர், நுங்கு, ஈச்சம்பழம், வாழைப்பழம் தொங்கவிட அலங்கரிக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
தண்ணீர் பந்தலை திறந்த உடனேயே பொதுமக்கள் முந்தி அடித்துக் கொண்டு தண்ணீர் பந்தலுக்கு அமைக்கப்பட்டிருந்த கீரணிப்பழம், தர்பூசணி பழம், குளிர்பானம், கீரைக்காய் போன்றவை பொதுமக்கள் பையில் அள்ளிக் கொண்டும், மூட்டை கட்டி பொதுமக்கள் ஐந்தே நிமிடத்தில் தண்ணீர் பந்தலில் உள்ள பழங்களை காலி செய்தனர்.