காஞ்சிபுரம், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
தேசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி 9 க்கும் மேற்பட்ட பதக்கங்களை காஞ்சி வீரர்கள் வென்றனர்.
தமிழ்நாடு ரிங் ஃபைட் அசோசியேஷன் (RING FIGHT ASSOCIATION) சார்பாக அரக்கோணத்தில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.இந்த போட்டியானது கடந்த மாதம் 07 ஆம் தேதி தொடங்கி 11 தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.
இந்த போட்டியில் டெல்லி, அரியானா, சண்டிகர், அகமதாபாத், உள்ளிட்ட 16 மாநிலங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துக் கொண்டு தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இந்த குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள காஞ்சிபுரத்தில் உள்ள NA BOXING அசோசியேஷனில் இருந்து பயிற்சியாளர் நூர் முகம்மது தலைமையில் சுமார் 10 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கஃப்(CUB),சப் ஜீனியர் (sub junior) ,ஜீனியர் (junior), யூத்(youth),சீனியர்(senior), உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் காஞ்சிபுரத்தை சார்ந்த வீரர்கள் போட்யிட்டி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று காஞ்சிபுரத்திற்க்கு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிற்க்கே பெருமை சேர்த்துள்ளனர். இதில் காஞ்சிபுரத்தை சார்ந்த வீரர்கள் 1 தங்கம்,4 வெள்ளி,4 வெண்கலம் உள்ளிட்ட 9 பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்று திரும்பிய காஞ்சிபுரம் வீரர்களுக்கு NA பாக்ஸிங் அசோசியேஷன் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுரேஷ்குமார் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கூறுகையில், மாணவர்கள் தொடர்ந்து விடா முயற்சியுடன் பயிற்சி மேற் கொண்டதன் பயன்தான் இந்த வெற்றி, 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் இடையில் காஞ்சிபுரத்தை சார்ந்த வீரர்கள் 10 க்கும் மேற்பட்டோர் பதக்கங்கள் வென்றது பெருமையாக உள்ளதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.
வீரர்கள் கூறுகையில், இதுப் போன்று பதக்கங்கள் பெறுவது மிகவும் ஊக்கமளிக்கிறது, இதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு மேலும் பல விதமான போட்டிகளில் வெற்றி பெற்றும், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டும் தங்கம் வென்று வந்து இந்தியாவிற்கு பெருமை சேர்ப்போம் என தெரிவித்தனர்.