மதுரவாயல், ஜூன். 18 –
சென்னை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் மதுரவாயில் போலீசாரால் சிறப்பு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் இணை ஆணையர் வெஸ்ட் ஜோன் ராஜேஸ்வரி (ஐபிஎஸ்) கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் ,உதவி ஆணையர் ரமேஷ் பாபு மற்றும் மதுரவாயில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சிவ ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.
மதுரவாயல் வளசரவாக்கம் ஆலப்பாக்கம் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 62 பேர் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களின் கைத்திறனை ஓவியமாக வரைந்து காட்டினார்கள். காவல் துறையினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற இருக்கும் ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு காவல்துறையினர் சார்பில் சான்றிதழ்களும், பதக்கங்களும், கோப்பைகளும், வரும் திங்கட்கிழமை சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பரிசுகள் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.