சென்னை, நவ. 18 –
தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க அரசு முதன்மை செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது பெருநகர மாநகராட்சி பொதுச் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி ( ANM Course ) தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிப்புரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். எனவும் மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
உதவி செவிலியர் பயிற்சிக்கு ( ANM Course ) + 2 வில் தேற்ச்சி பெற்றிருக்க வேண்டும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் தொற்று நோய் மருத்துவமனை, எண். 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை 81 ல் உள்ள அலுவலகத்தில் வேலை நாட்களில் நேற்று முதல் நவ 22-2021 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 23 – 2021 மாலை 4 மணிக்குள் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.