திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை ஆகஸ்டு 17 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் ஆவூர் வேளாண் உற்பத்திக் குழுவிற்கு 2020-2021 க்கான மூலதன நிதி ரூ.5,00,000 வழங்கப்பட்டுள்ளது.
இம்மூலதன நிதியின் மூலம் பல்வகை தானியம் அடிக்கும் கருவி ஒரு எண்கள் ரூ.2,72,700 மதிப்பிலும், சுழல் கலப்பை இரண்டு எண்கள் ரூ.2,23,200 மதிப்பிலும் மற்றும் விசை களை எடுக்கும் கருவி ஒரு எண்கள் ரூ.52,500ம் ஆக மொத்தம் ரூ.5,48,400 மதிப்பில் இக்கருவிகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இவற்றில் ரூ.5,00,000 மூலதன நிதியாக அரசின் கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலமும், மீதமுள்ள தொகை ரூ.48,400 குழுவின் பங்களிப்பாகும்.
இதனை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் நாடழகானந்தல் கிராமத்தில் விவசாயி ஊ.கருணாநிதி தஃபெ.சின்னக்கண்ணு என்பவரின் 1.8 எக்டர் நிலத்தில் கரும்பு பயிரில் சொட்டு நீர் பாசனம் ரூ.1,90,590 மதிப்பில் 100 சதவீத மானியமும், மற்றும் கரும்பு பயிருக்கு கூடுதல் மானியமாக ரூ.66,655ம் ஆக மொத்தம் ரூ.2,57,245 மதிப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளதையும், கரும்பு கரணைகள் நடவினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு, கரும்பு கரணையினை நட்டார்.
இந்நுண்ணீர் பாசன திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஒரு எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,13,133ம,; இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் ஒரு எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.87,880ம் வழங்கப்படுகிறது. கரும்பு பயிருக்கு கூடுதலாக ஒரு எக்டருக்கு ரூ.49,758 வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் க.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வே.சத்தியமூர்த்தி, உதவி இயக்குநர், க.சந்திரன், வட்டார வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.