பொன்னேரி, ஆக. 14 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் வாரம் செவ்வாய்கிழமைத் தோறும் விஷேச சிறப்பு பூஜைகள்  நடைப்பெறும். அதில் பங்கேற்க திரளான முருக பக்தர்கள் அத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும், தொடர்ந்து 6 வாரங்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்களின் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், செங்கற்களை அடுக்கி வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வாடிக்கையாக உள்ளது.

சிறுவாபுரி முருகன் கோவில் புணரமைக்கப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் சிறுவாபுரி கோவிலின் திருக்குளம் சீரமைப்பு பணிக்காக ரூ. 3.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி இன்று அத்திருக்கோயிலில் தொடங்கும் விழா நடைப்பெற்றது.

அப்பணியினை காணொளிக்காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சிறுவாபுரி கோவிலில் ரூ. 2.30 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மீக புத்தக நூலகத்தினையும், முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது, பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் ராணி, திருக்கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார், முன்னாள் அறங்காவலர்கள் ரமேஷ், பார்த்தசாரதி, சோழபுரம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், மீஞ்சூர் முன்னாள் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், சிறுவாபுரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here