சென்னை, ஜன. 10 –

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர் பருவ ( ரபி ) பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 2.02 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.284 கோடியும், மற்றும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் சுமார் 19, 282 விவசாயிகளுக்கு ரூ.34.30 கோடியும் என மொத்தம் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி மதிப்பீட்டிலான இழப்பீடு தொகை வழங்கும் பணியினை தொடங்கும் விதமாக தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து விவசாயிகளுக்கு அரசாணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும், இந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்திற்காக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிலிருந்து காப்பீட்டு மானியத்தில் ஒன்றிய அரசின் சார்பில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30 சதவீதம் வரையிலும், பாசன வசதியுள்ள மாவட்டங்களுக்கு 25 சதவீதம் வரை பங்களிப்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பில் 60 முதல் 65 சதவீத பங்களிப்போடும் இத்திட்டம் செயல்படுத்தப்படு வருகிறது.

மேலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் இத்திட்டம் 37 மாவட்டங்களை உள்ளடக்கி 14 தொகுப்புகளில் இணை காப்பீட்டுத் திட்டமாக 80:20  என்ற விகித த்தில் இடர் நிகழ்வுகளை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுடன் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இப்கோ – டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் இணைந்து செயல்படுத்தின.

மேலும் இத்திட்டத்தின் வாயிலாக கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு குளிர் பருவ ( ரபி ) பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.276.85 கோடி மதிப்பீட்டிலான தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டும், மேலும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் 152 கோடியிலான தொகையும், மற்றும் இப்கோ – டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் சார்பில் ரூ.132 கோடியிலான தொகையென மொத்தம் ரூ.284 கோடி மதிப்பிலான தொகை தற்போது இழப்பீட்டு தொகையாக சுமார் 2.02 இலட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 80.357 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற் பயிர் பாதிப்படைந்த து. மேலும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட 277 வருவாய் கிராமங்களுள் 87 வருவாய் கிராமங்களில் 75 சதவீத த்திற்கும் மேற்பட்ட பரபரப்பளவில் சுமார் ஒருமாதம் வயதுடைய சம்பா நெற் பயிர் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்த து.

மேலும் பயிர் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின் படி 75 சதவீத த்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்ட 87 வருவாய் கிராமங்கள் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டு, அதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு செய்த நடப்பு ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கிட ஏதுவாக 39, 142 ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு ரூ.8,762 வீதம் சுமார் 19,282 விவசாயிகளுக்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான தொகையினை ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சுமார் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ. 318.30 கோடி மதிப்பிலான தொகை வழங்கப்படுகிறது.

இப்பணியினை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் முதற்கட்டமாக ஐந்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சுற்றுச்சீழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன், எம்.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசுச்செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் மருத்துவர் பிருந்தாதேவி, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் பி.பிரபாகர், இப்கோ – டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் முதிநிலை மேலாளர் சிவராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here