மீஞ்சூர், ஏப். 29 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பூங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள சின்ன மாங்கோடு பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் அன்புவிடம் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை கவுன்சிலர் அன்பு மீஞ்சூர் ஒன்றிய சேர்மனிடம் தெரிவித்ததையடுத்து ஒன்றிய தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 7 லட்சம்  மதீப்பீட்டில்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.

இதே போல் அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் வேண்டி கோரிக்கை விடுத்தனர். அதனையும் கருத்தில் கொண்டு ஒன்றிய நிதியில் இருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டது.

முடிவடைந்த இவ்விரு நலத்திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று பூங்குளம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒன்றியக்குழு தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் அன்பு தலைமை தாங்கினார். இதில் திமுக ஒன்றிய பொருளாளர் முனிவேல், கழக அவைத்தலைவர் ரவி, பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் சின்ன மாங்கோடு செட்டிமார்கள் கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், மகளிர் குழுவினர், என பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து கவுன்சிலர் அன்புக்கு நன்றி தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here