தென்குடி, பிப். 27 –
திருவாரூர் மாவட்டம் தென்குடி கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவசக் கல்வி அறக்கட்டளை சார்பில் இன்று அங்காளம்மன் அன்பு இல்லம் எனும் புதியக் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற ZOHO மெயில் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பங்கேற்று நிகழ்ச்சி நிரல் பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மாணவ,மாணவியர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், சிலேட்டு உள்ளிட்ட கல்விக்கான உபகரணங்களை வழங்கினார். மேலும், இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அவர் வரும் காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் கல்விக்கான பணிகளை இப் புதிய கட்டத்தில் இருந்து துவங்கவுள்ளதாகவும், மேலும் ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந் நிகழ்வில் தென்குடி ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடத்தின் சார்பாக அன்பு இல்லம் மற்றும் இலவச காப்பகம் ஸ்ரீ அங்காளம்மன் குருகுலம் நடத்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். ஸ்ரீ அங்காளம்மன் அறக்கட்டளையின் சார்பாக மாலை நேர பல்துறை பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் அதிக மதிப்பெண் பெற 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு தினசரி சிறப்பு பயிற்சி வகுப்புகள், ஓவிய பயிற்சி, பரதநாட்டிய பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பாடல் பயிற்சி, சிலம்பம், கராத்தே, யோகா பயிற்சிகள் நடைபெற்று வருகிறது என்பது இதன் சிறப்பாகும்.
இச்சிறப்பு மிக்க பயிற்சிகள் தற்காலிக கட்டிடத்தில் நடைப்பெற்று வந்த நிலையில், தற்பொழுது இதற்கு சொந்த கட்டிடமாக கட்டப்பட்டு இன்று அந்த கட்டிட திறப்பு விழாவானது சிற்பாக நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் இலக்கியா சிறப்பு வருந்தினராக பங்கேற்று, தினந்தோறும் கல்வி பெறும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் கல்வி உபகரணங்களும் வழங்கினார். மேலும் நிகழ்வில் தமிழ் சேவா சங்க அரங்காவலர் ஞான.சரவணவேல் மாவட்ட அமைப்பாளர் ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர் செல்.சரவணன் மற்றும் தர்ம ரக்ஷண ஸமிதி மண்டல அமைப்பாளர் நாகராஜன் மாவட்ட அமைப்பாளர் விக்னேஸ்வரன் தொழிலதிபர் சென்னை மோகன், உடல் கல்வி ஆசிரியர் வினோத் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய நபர்கள் எனத் திரளானவர்கள் பங்கேற்று இவ் கல்வி அறக்கட்டளையின் செய்து வரும் தொண்டுகள் குறித்து பாராட்டுக்களையும், புதிய கட்டட திறப்பு விழா காணும் அவ் அறக்கட்டளைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வினை தென்குடி ஸ்ரீ அங்காளியம்மன் சித்தர்பீடம் இலவச கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் அப்புவர்மா சாமிகள் மற்றும் காயத்ரி அப்புவர்மா சாமிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தினந்தோறும் மாலை நேர வகுப்பில் கற்றுக்கொண்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.