சென்னை, மார்ச். 02 –

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் கடந்த இருநாட்களில் தமிழ்நாடு அரசு  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை மற்றும் உற்பத்தி செய்தவர்களிடம் இருந்து 43,150 கி.கிராம் நெகிழிகளை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து அவர்களிடமிருந்து ரூ.43, ஆயிரத்து 600 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையிலும் பிளாஸ்டிக் கொருட்களுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் கடந்த டிச 23 -2021 அன்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்களால் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக கடந்த பிப் 28 முதல் மார்ச் 1 -2022 ஆகிய இரண்டு தினங்களில் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.11, ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 96 கி.கிராம் வரையிலான நெகிழிகள் பறிமுதல் செய்யப்படுள்ளது.

மேலும் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவன வளாகங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் 289.5கி.கிராம்  கி.கிராம் வரையிலான தடைசெய்யப்பட்ட நெகிழிகளை பறிமுதல் செய்து அவர்களிடமிருந்து ரூ.29,500 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிப். 28 அன்று தேனாம்பேட்டை மண்டலத்தில் 93 வணிக நிறுவனங்களில்  நடத்திய கள ஆய்வில் 34 கி.கிராம் நெகிழிகளும், ரூ. 3600 அபராத த்தொகையும், அதுப்போன்று அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மார்ச் 1 ஆம் தேதி அன்று கள ஆய்வு மேற்கொண்டதில் 12 கிலோ வரையிலான தடைசெய்யப்பட்ட நெகிழிகளும் அந்த வணிக நிறுவனங்களிமிருந்து அபராதத் தொகையாக ரூ.1500 வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆக பிப் 28 மற்றும் மார்ச் 1 வரை பெருநகர சென்னை மாநராட்சியால் மொத்தம் 43,ஆயிரத்து 150 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிகளை வணிக நிறுவனங்களிடமிருந்து பறிமுதல் செய்தும் அந் நிறுவனங்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.45 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here