தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் – ரேவதி தம்பதியரின் ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக இருந்துள்ள நிலையில், தொடர்ந்து ஆங்கில வழி பள்ளியில் படிக்கும் போதே ஆங்கில நீதிக்கதைகளில் ஆர்வமாக இருப்பதை அறிந்த தாய் ரேவதி இனியாவிடம் உனக்கு தோன்றிய கதைகளை எழுது நன்றாக வந்தால் புத்தகமாக போடலாம் என்றதும், சில மாதங்களிலேயே 12 நீதிக்கதைகளையும் எழுதி அந்தந்த கதைகளுக்கான ஓவியங்களையும் சிறுமி இனியாவே வரைந்துள்ளார்.
நீதிக்கதைகள் நன்றாக வந்ததால் இனியாவின் பெற்றோர் ” இனியாவின் சிறுகதைகள் எனும் தலைப்பில் 12 நீதிக்கதைகளை கொண்ட 24 பக்க ஆங்கில நூலை உருவாக்கியுள்ளனர்..
இனியா எழுதிய நூலை தஞ்சையில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சி. மகேந்திரன் வெளியிட்டார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன் நூலை பெற்றுக்கொண்டார்
10 வயது சிறுமி ஆங்கிலத்தில் நீதிக்கதைகளை எழுதி சாதனை புரிந்ததை இனியாவின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் பாராட்டினர்.
இதுகுறித்து இனியா கூறுகையில் எனக்கு கதைகள் மேல் அதிக ஆர்வம் அதனால் நான் 12 நீதிக்கதைகளை எழுதினேன் என்றும் தொடர்ந்து தமிழில் கதை எழுதுவேன் என்றவர், விடுமுறை காலத்தில் கதை புத்தகங்கள் தொடர்ந்து படித்ததால், நீதிக்கதைகளை கொண்ட புத்தகத்தை உருவாக்க என்னும் தோன்றியதாக தெரிவிக்கின்றார்.
இனியாவின் இந்த சாதனையை முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.. உலகில் மிக இளம் வயதில் கதை எழுதி புத்தகமாக வெளியிட்ட சாதனையாளர்கள் வரிசையில் இனியாவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..
இனியா (10 வயது சிறுமி) இனியாவின் சிறுகதைகள் நூல் ஆசிரியர்