கும்பகோணம், ஆக. 29 –
கும்பகோணத்தில் உள்ள அப்துல் அஜீஸ் என்பவர் தனது வீட்டில் பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 15 பந்தய புறாக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுக்குறித்து அவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கும்பகோணம் மேலக்காவேரி கீழ குடியானத் தெருவில் வசித்து வருபவர் அப்துல் அஜீஸ் இவர் புறா வளர்ப்பில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார் இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுக சிறுக பணத்தை சேமித்து, இவர் தனது வீட்டு மாடியில் கூண்டு அமைத்து அதில் புறாக்களுக்கு பயிற்சியளித்து, பந்தயத்திற்கு தயார் செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை புறாக்களை பார்க்கச் சென்றபோது, இவர் வளர்த்த கூண்டில் இருந்த 15 பந்தய புறாக்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று இரவு இப்புறாக்களை யாரோ திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு புறாக்களின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 4000 என கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்துல் அஜீஸ் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி. அப்துல்அஜீஸ்,
புறா வளர்ப்பவர். மேலக்காவேரி கும்பகோணம்.