கும்பகோணம், மார்ச். 24 –
கும்பகோணத்தில் மெல்லும் புகையிலை மீதான தடையை நீக்கக் கோரி, அரசின் தடை காரணமாக மூடப்பட்டுள்ள கும்பகோணம் தனியார் புகையிலை நிறுவனத்தில் பணியாற்றி தற்போது வாழ்வாதாரத்தை இழந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவன உரிமையாளர் வீட்டின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் 40 ஆண்டுகள் பழமையான தனியார் புகையிலை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மெல்லும் புகையிலைக்கு தடை விதித்தது. இதனையடுத்து இந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டது. இதில் பணியாற்றிய 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் இருந்து வருவாய் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து எந்தவித பயனும் இல்லாத நிலையில் இன்று நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டின் முன்பு தமிழக அரசு புகையிலை மீதான தடையை நீக்க வேண்டும், நிறுவனம் மூடப்பட்டதால் பணியிழந்துள்ள தங்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். அல்லது இழப்பீடு தொகை வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தொழிலாளர்கள் தொழில் நிறுவன உரிமையாளர் வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேட்டி : கணேசன்
பாதிக்கப்பட்ட மெல்லும் புகையிலை தொழிலாளர்