அத்திப்பட்டு, ஜூன். 28 –

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதி என்பது தாழ்வான பகுதியாகும் அதனால் ஆண்டுதோறும் அப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய  சமூக மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் அப்பணிக்குறித்து அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கும் போது இப்பணிகள் முழுமையான திட்டமிடல் இல்லாமல் குறைந்த அளவிலான கட்டடப்பணிகள் நடைப்பெறுவதாகவும், மேலும் அப்பகுதில் உள்ள நீர் நிலை வழிப்பதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும், அப்பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், புகார் தெரிவிக்கின்றனர். அதனால் ஆண்டு தோறும் மழைநீரால் பாதிக்கப்படும் நிலை மாறாதென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே அப்பகுதிகளில் உள்ள நீர் நிலை வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், முறையாக அளவீடு செய்து  தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், மேலும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் நடைப்பெற்று வரும் பணிகள் கடந்த 16 ஆம் தேதி  நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும்  நேற்று அப்பணிகள் தொடங்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதி மக்களுக்கு அப்பணி மீது முழுமையான திருப்தியில்லாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இத்தகவலறிந்து அங்கு வந்த மீஞ்சூர் காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று சார் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

மேலும் சார் ஆட்சியர் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வினை எடுத்திட வேண்டுமென அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அவரிடம் வழங்கினார்கள். தொடர்ந்து அம்மனுவினை பெற்றுக் கொண்ட சாராட்சியர், அப்பிரனைக் குறித்து விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here