கும்பகோணம், ஜன. 10 –

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கும்பகோணத்தில் நாளை மறுதினம் ஜனவரி 12-ஆம் தேதி வீரத் துறவி சுவாமி விவேகானந்தருடைய 159 வது ஜெயந்தி விழா தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து விவேகானந்தர் ஜெயந்தி அன்று வரும் ஜன 12 ஆம் தேதி, மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

கும்பகோணம் ஆன்மீக நகரத்தில்  சுவாமி விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்ட வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கும்பகோணத்தில் விவேகானந்தருக்கு மணிமண்டபம் அமைக்க கோரியும் ஆண்டுக்கு எட்டு முறை விடுமுறை அளிக்கின்ற தமிழக அரசு விவேகானந்தர் ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்க வலியுறுத்தியும் உடனடியாக  கோரிக்கையை ஏற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அதற்கான அரசாணை நிறைவேற்ற வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் விவேகானந்தர் வேடம் அணிந்து அரசு கல்லூரி அருகில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் பிரபாகரன் சிவசேனா கட்சி மண்டல பொறுப்பாளர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் பாலா பேசுகையில் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பியிருக்கிறோம் 1897 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உரையாற்றி விட்டு தென் தமிழகத்திற்கு விஜயம் செய்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் ராமநாதபுரம் மதுரை பரமக்குடி திருச்சி கும்பகோணம் ஆகிய ஊர்களில் ஸத்சங்கம் நடத்தி இருக்கிறார்கள்.

குறிப்பாக கும்பகோணத்தில் மௌனசாமி மடம் போர்ட்டர் டவுன் ஹால், ரயில் நிலையம் ஆகிய பகுதியில் ஸத்சங்கம் நடத்திருக்கிறார்கள் விவேகானந்தரை பெருமைப்படுத்தும் விதமாக கும்பகோணத்தில்  மணிமண்டபம் கட்ட வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் என்று நம்புகிறோம்.  எல்லா தலைவர்களுக்கும் சிலை இருக்கிறது ஆனால் சுவாமி விவேகானந்தருக்கு மட்டும் சிலை இல்லை தமிழக அரசு உடனடியாக மணிமண்டபம் கட்டி  கொடுக்க வேண்டும். கொரோனா பெரும் தொற்று காரணமாக  திருக்கோயில்களை மட்டும்  மூடுவதற்கு அரசு முனைப்பு காட்டுகிறது. டாஸ்மாக் கடைகளை மூட முனைப்பு காட்டவில்லை அங்கெல்லாம் கொரோனா தொற்று பரவாதா ? உடனே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here