காஞ்சிபுரம், மே. 14 –

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் துவங்கியதை தொடரந்து கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை நேரத்தில் கன மழை பெய்து வருவதால் குளுர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.

குறிப்பாக காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம், செவிலிமேடு, ஓரிக்கை, களக்காட்டூர், வேடல், குருவிமலை,  பூக்கடைசத்திரம், பொன்னேரிகரை, வெள்ளைகேட், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கோடை வெயிலில் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30-நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருவதால் குளுர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here