காஞ்சிபுரம், நவ. 04 –

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரத் சிட்டொரியா கராத்தே அகாடமி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கூடோ பயிற்சியானது கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட கூடோ சங்க செயலாளர் ஆர் பாலா மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த  கூடோப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து   மாநில அளவிலான கூடோ போட்டியில் வெற்றி பெற்று,  தேசிய அளவில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைப்பெற்ற அக்ஷய்குமார் இண்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் மற்றும் நேஷனல் கூடோ டோர்ணமெண்ட், நேஷனல் கூட  ஃபெடரேஷன்கப் போட்டியிலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் பங்கேற்ற நிலையில் குஜராத் மாநிலம்  சூரத்நகரில். தேசிய அளவிலான 13வது கூடோ போட்டி மற்றும் 3வது கூடோ ஃபெடரேஷன் கப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு ,அந்தமான் — நிக்கோபார், உத்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இதில் தமிழகத்தைச் சார்ந்த 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்  கலந்து கொண்டனர்.

இறுதி போட்டியில் தமிழக வீரர்கள்  5 தங்கப் பதக்கங்கள் மற்றும் 6 வெள்ளி பதக்கமும் 11 வெண்கல பதக்கங்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.  இதில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக ஆறு மாணவர்கள் பங்கேற்றனர்.

13ஆவது கூடோ போட்டியில் பங்கு பெற்ற காஞ்சிபுரம் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ரோகித் 63 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் மற்றும் 3 வது கூடோ ஃபெடரேஷன்கப் போட்டியில் பங்கேற்ற 14 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரவின்குமார் 54 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள்   மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷை சந்தித்து அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.

மேலும், இப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ள ஜப்பான் உலக கூடோ போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்போம் எனத் தெரிவித்தனர். இதில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 22 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இப்போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர்கள் மற்றும் வீரங்கணைகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட கூடோ விளையாட்டு சங்கம் தலைவர் திமோதி மற்றும் மாவட்ட கூடோ சங்க செயலாளர் ஆர் பாலா மற்றும் பெற்றோர்கள் வீரர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here