கும்பகோணம், ஏப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கீழ்ப்பறட்டை கிராமத்தின் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன், மற்றும் எல்லை தெய்வம் ஸ்ரீ கிராம பிடாரி அம்மன் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் செய்திட திட்டமிடப் பட்டது.

அதனைத் தொடர்ந்து பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை,  நடைபெற்று, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் கஸ்யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது,

தொடர்ந்து இன்று  2ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, மூலவர் விமான கலசம்  சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,

பிறகு, மூலவர் பரிவார தெய்வங்களுக்கு  பாலபிஷேகம், நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here