ஆவடி, மே. 02 –

ஆவடி அடுத்துள்ள அண்ணனூர் இரயில்வே நிலையம் அருகே மக்கள் ராஜ்யம் கட்சியின் சார்பில் அக்கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் எதிர்வரும் மே 8 ல் இருபத்தி நான்கு மாவட்ட போயர் மற்றும் ஒட்டர் இன மக்களை ஒன்றுத் திரட்டி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே அவ்வினமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது .

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு பகுதிக்குட்பட்ட அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் மக்கள் ராஜ்யம் கட்சியினர் சார்பில் போயர் மற்றும் ஒட்டர் இன மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் அவ்வின பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவெடுத்து, அதற்காக தமிழகத்தில் இருபத்திநான்கு மாவட்டத்தில் உள்ள போயர் ஒட்டர் இன மக்களுடன்  கலந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

போயர் ஒட்டர் இன மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள 50 லட்சம் போயர் ஒட்டர் இன மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு கல்குவாரிகள் வைப்பு நிதி இல்லாமல் கல்குவாரி வழங்க வேண்டும் என்றும் மற்றும் நிலத்தடி பகுதியில் கல்லுடைக்கும் ஏழை எளிய மக்களுக்கு எவ்வித தடைகளும் இன்றி கல் உடைக்க அனுமதி வழங்கிட வேண்டும் என்றும் மேலும் டி என் டி சாதி சான்றிதழில் போயர் ஒட்டர் இனத்தின் பதினோரு உட்பிரிவுகளையும் ஒன்றிணைந்து அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் எந்தத் தடையுமின்றி டி என் டி என்று ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

 

பேட்டி மக்கள் ராஜ்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் சிவசாமி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here