நன்னிலம், ஏப். 26 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள தனியார் திருமண மண்டபத்தில் லயன்ஸ் சங்கம் வண்டாம்பாளை கண் மருத்துவமனை திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நன்னிலம் லயன்ஸ் சங்க தலைவர் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இம் இலவச முகாமை நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராஜசேகரன் துவக்கி வைத்தார். முகாமில் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மருத்துவ பயனிகள் இம் முகாமில் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இதில் கண் அறுவை சிகிச்சை தேவைப்படும் மருத்துவ பயனாளிகளை கண்டறிந்து பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் பலருக்கு இலவச அறுவை சிகிச்சையும் மற்றும் ஐ.ஓ.எஸ். லென்ஸ் பொருத்திய கண்ணாடி இலவசமாக வழங்கினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here