புதுச்சேரி, பிப். 23 –

புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தில்லி என்கிற சரோஜினி என்பவர் ஜனவரி 14–ஆம் தேதியும், அவரது கணவர் சுப்ரமணி ஜனவரி 24–ஆம் தேதியும் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தனர்.

இதனிடையே சாரதி நகரில் அவர்கள் வசித்து வந்த வீட்டை அவர்கள் மறைவிற்கு பிறகு அரசு நூலகம் அமைக்க வேண்டும் என்று 1970–ஆம் ஆண்டு உயில் சாசனம் எழுதி வைத்திருந்தனர்.

அதனடிப்படையில் ரூ. 3 கோடி மதிப்பிலான தமது உடன் பிறந்த அக்காவின் வீட்டை திமுக முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அவர்களை சந்தித்து வீட்டின் பத்திரம் மற்றும் சாவியை ஒப்படைத்தார்.

சாவி மற்றும் வீட்டின் பத்திரத்தை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விரைவில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது அவர்களிடம் முதலமைச்சர் உறுதியளித்தார். மேலும் அந் நூலகத்திற்கு வீட்டை வழங்கிய உரிமையாளரின் பெயரை வைக்க வேண்டுமெனவும் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here