மயிலாடுதுறை, பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், 2 ஆம் நம்பர் புதுத்தெரு அமைந்துள்ள ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியலில் 6 வது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுப்பட்ட 2 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருடிச்செல்லும் சிசிடிவி பதிவுகளுடன் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் வாயிலில் திறந்த வெளியில் ஒன்றரை அடி உயரத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த உண்டியல் பூட்டை நேற்று 26 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் இரண்டு மர்’ம நபர்கள் அவ்வுண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் ரூ. 2 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். மேலும் அவ்விரண்டு மர்ம நபர்களும் இரும்பு ராடால் உண்டியல் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணம் மற்றும் காசுகளை வேட்டிக்குள் போட்டு திருடிச்செல்லும் வீடியோ கோயில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் இதுவரை அக்கோயிலின் உண்டியல் 6 முறை உடைக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிட தக்கதாகும். அதனைத் தொடர்ந்து, இரண்டு முறை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2 முறை திருட முயற்சித்த போது பொதுமக்கள் வந்ததால் திருடர்கள் உண்டியல் பணத்தை கையில் கிடைத்தவரை அள்ளிகொண்டு தப்பியோடியுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள பயன் பாடற்ற ரயில்வே பாதையில் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கஞ்சா மற்றும் மது அருந்துவதற்காக முகாமிடுவதால் அக்கோயில் வழியாக செல்லும் மர்ம நபர்களால் தொடர்ந்து கோயில் உண்’டியல் உடைக்கப் பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதனை தடுத்திடும் வகையில் போலீசார் இரவு நேரங்களில் ரயில்வே பாதையில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here