தேவகோட்டை –  சந்திரயான் – 2 விண்கலம் கடந்த செப் -7 ஆம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் தடம் பதிக்கும் தருணத்தை இந்தியா மட்டுமல்லாது உலகளவில் எதிர்பார்ப்பு களுடன் காத்திருந்தவர்களுக்கு 2.1கி.மீ தொலைவில் அது பூமிக்கான தகவல் துண்டிப்பை இழந்தது.

இதனை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள்  திட்டமிட்டபடி, நிலவில் விக்ரம் தரை இறங்க முடியாமல் போனதால், கண் துயிலா கடின உழைப்பு, கனவாகி போகுமோ என்ற நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மனம் தளர்ந்து கண் கலங்கினர். அவர்களுக்கு பிரதமர் முதல் பல்வேறு தரப்பினர் ஆறுதல் அளித்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் நதியா என்கிற 11 வயது சிறுமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தன் கைபட எழுதிய கடித த்தில் தீரா நம்பிக்கையுடன் செயல் படுங்கள் தீர்வு எட்டும் என பொருள் பட அவர் எழுதி உள்ள கடிதம் அவர்களுக்கு  100 % புத்துணர்வையும், ஊக்கத்தையும்  தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்றே தோன்றுகிறது.  மேலும்   11 வயது சிறுமி , இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, கைப்பட உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதி உள்ளது, சமூக வலைதளங்களில், பாராட்டுகளை பெற்று வருகிறது.

சந்திரயான் – 2ல் இருந்து பிரிந்து சென்ற, “லேண்டர்எனப்படும் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனம், நிலவில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பூமியுடனான தகவல் தொடர்பை இழந்தது. இந்நிலையில், லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி இருக்கும் புகைப்படத்தை, ‘ஆர்பிட்டர்எனப்படும் நிலவை சுற்றி வரும் சாதனம், நேற்று முன் தினம் வெளியிட்டது. லேண்டரின் நிலை குறித்தும், தகவல் தொடர்பை மீண்டும் செயல்படுத்தவும், இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், கடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தன்னம்பிக்கையே வெற்றி தரும், உங்கள் நம்பிக்கையை கை விடாதீர்கள்,  ‘ என, தலைப்பிடப்பட்டுள்ள இந்த கடிதத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் , ‘டுவிட்டர்சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். சமூக வலைதளத்தில், பகிரப்பட்ட இந்த கடிதம், பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்களை குவித்து வருகிறது.

                                            கடந்த ஜூலை 9ம் தேதி (09/07/2019) இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் அய்யப்பன் சந்தரியான் –2 வெற்றி பெற வாழ்த்தி  இன்லேண்ட் கடிதத்தில் எழுதி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here