கும்பகோணம், ஜூலை. 05 –

பயிர் காப்பீட்டிற்காண இழப்பீட்டினை காலதாமதமாக வழங்கினால், அதனை வட்டியுடன் வழங்க வேண்டும் என சட்ட விதிகள் இருந்த போதும் அதனை வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன அதனை கண்டித்தும், மக்கா சோளத்திற்காண இழப்பீட்டினை முழுமையாக வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்வதற்காண விவரங்களை இதுவரை ஒன்றிய அரசோ, தமிழக அரசோ, காப்பீட்டு நிறுவனங்களை அறிவிக்காமல் கால தாமதம் செய்வதை கண்டித்தும் ஏராளமான விவசாயிகள் கைகளில் மக்கா சோள பயிர்களை ஏந்தி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் திரண்டு, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு பயிர் காப்பீட்டிற்காண சட்ட திருத்தம் செய்யப்பட்டது அதில், விவசாயிகளுக்கு தாமதமாக வழங்கும் இழப்பீட்டிற்கு உரிய வட்டியுடன் வழங்க வேண்டும் என சட்டவிதி உள்ளது இருப்பினும் அதனை சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் கண்டு கொள்ளவதில்லை, அதன் மீது ஒன்றிய அரசோ, மாநில அரசோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை, எனவே இதனை கண்டித்தும், மக்கா சோள பயிர்களுக்கு முறையான பயிர் காப்பீட்டிற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு இதுவரை பயிர் காப்பீடு செய்வது குறித்து சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களோ, ஒன்றிய அரசோ, மாநில அரசோ இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடாததை கண்டித்தும் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு, ஏராளமான விவசாயிகள் மக்கா சோள பயிர்களை கையில் ஏந்தி, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் லதாவை நேரில் சந்தித்து இது குறித்த மனுவையும் அளித்தனர்

 

பேட்டி : சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், செயலாளர்,

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here