மீஞ்சூர், டிச. 19 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வெள்ளிவாயல்    கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது அதன் இருபுறக் கரையோரம் நூற்றுக்கும் மேற்றபட்ட ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உட்பட தொழிற்சாலை, செங்கல் அருக்கம் சூலைகள் உள்ளதெனவும்,  அங்கு பணிபுரிகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெள்ளி வாயல்சாவடி பகுதியில் ஓடும் அவ்வாற்றினைக் கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும்,

மேலும் அப்பகுதிவாழ் மக்கள் பல ஆண்டுகளாக அவ்வாற்றினைக் கடந்துச் செல்ல தண்ணீரில் இறங்கி சென்றுதான் மறு கரையில் உள்ள விவசாயம் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த வேலைகளுக்கு தினந்தோறும் செல்ல வேண்டிய நிலை இருந்து வருவதாகவும்,  அதனால் தினந்தோறும் பல இன்னல்களை அனுபவித்தே தங்களின் வாழ்வாதாரத்தை தேடி வருவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெய்த மிக்ஜாம் புயல் மழையால் தங்களால் அவ்வாற்றில் இறங்கி செல்ல முடியாமல் தங்கள் வருமானத்தை இழந்ததோடு அல்லாமல் விவசாய நிலங்களில் பயிரிட்ட பயிர்களையும் கவனிக்க முடியாமல் அப்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி நாசம் அடைந்து பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது என அப்பகுதிவாழ் மக்கள்  தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினைக் குறித்து ஊராட்சி கிராம சபா கூட்டத்திலும் மேலும் பல்வேறு காலக்கட்டங்களில் அரசின் கவனத்திற்கு கோரிக்கை மனு வாயிலாக தெரிவித்தும் இந் நாள் வரை அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வில்லையெனவும், இதுவரை காலம் தாழ்த்தி வந்தாலும் இனியாவது எங்களுக்கு இப்பகுதியில் தரைப்பாலம் அமைத்து தந்து எங்கள் வாழ்விற்கு தங்கு தடையின்றி வருமானம் ஈட்டிட வழி வகுத்து தரவேண்டும் என்று அரசுக்கு அவ்வூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்  கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here