திருவள்ளூர், ஏப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

“பசி” திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முற்பகல் 11 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யபடும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் 1940- ஆம் ஆண்டு பிறந்த ஜே.துரை தமது திரை பயணத்தை சவுண்ட் இன்ஜினியராக தொடங்கி பின்னர் திரைப்பட எடிட்டராகவும், கன்னட மொழியில் துணை இயக்குனர் உள்பட பல்வேறு பரிமாணங்களில் திரைத்துறையில் பயணித்துள்ளார்.

பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 5 மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். மேலும் நீயா, கிளிஞ்சல்கள், “சதுரங்கம்”, “அவள் ஒரு காவியம்”, “ஒரு வீடு ஒரு உலகம்”, “எங்கள் வாத்தியார்” போன்ற திரைப்படங்களை அவர் இயக்கிவுள்ளார்.

மேலும் பல்வேறு மாநில விருதுகளையும், அவர் இயக்கிய “பசி” என்ற திரைப்படம் தேசிய விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி 5 மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய ஜேஎஃப்சி துரை வயது மூப்பின் காரணமாக தனது 84 ஆவது வயதில் உயிரிழந்தார் .

அவரின் உடல் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு நாளை முற்பகல் 11 மணியளவில், அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here