திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர் காவல் படை அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கமாக மாணவர் களிடையே ஒழுக்கத்தை மேம் படுத்த, அரசாணையின் படி முயற்சி மேற் கொள்ளப் பட்டு இன்று அதற்கான பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அரவிந்தன் தொடக்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

திருவள்ளூர்; செப்டம்பர்,3-

திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து பள்ளி மாணவர் களிடையே ஒழுக்கத்தை மேம் படுத்தும் வகையில் அரசு ஆணையிட்ட தின் பேரில் மாணவர் காவல் படை என்ற அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 164 அரசு பள்ளிகளில் 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இப் படைக்கு தேர்வு செய்யப் பட்டு பயிற்சிகள் அளிக்கப் பட்டு வரப் படுகிறது. இந்த அமைப்பின் செயல் பாட்டினை மேம் படுத்துவதற் காக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர் காவல் படையின் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என 550 பேர்களுக்கு இன்று திருவள்ளூர்  காமராஜர்  தெருவில் உள்ள எம்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி நடத்தப் பட்டது. அதில் மாணவர் காவல் படையின் செயல்பாடு குறித்து புது டெல்லியில் பயிற்சி பெற்ற உதவி ஆய்வாளர் செல்வகுமார்,  ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரி களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும், பயிற்சி எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்தார்.  இந்த பயிற்சி வகுப்பு துவங்கும் முன்னர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அரவிந்தன் இந்த பயிற்சி யினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்  மேலும், பள்ளி மாணவர் களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது, சமூகத்தில் மாணவர் களின் கடமை என்ன என்பது குறித்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரி களுக்கு வழிகாட்டுதல் களை தெரிவித்தார்  இந்த நிகழ்ச்சியில் மாணவர் காவல் படையின் பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வநாத் ஜெயன்  திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண் காணிப்பாளர் கங்காதரன் கலந்துக் கொண்டு இப் பயிற்சி தொய்வின்றி நடப்பதை உறுதிப் படுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here