மீஞ்சூர், ஜூன், 05 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் திடீர் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு  பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அலெக்சாண்டர்  மற்றும் செயல் அலுவலர் வெற்றிஅரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர்கள் ராமகிருஷ்ணன் அன்பரசு உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர்.

கூட்டத்தில் 12 க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முக்கிய தீர்மானங்களாக இரவு நேரத்தில் துப்புரவுப் பணி செய்வது குறித்தும் மக்கும் குப்பை .மக்காத குப்பை .தரம் பிரிப்பது, .சாலை ஓரத்தில் சிறு வியாபாரிகளுக்கு அரசு அறிவித்தபடி மக்கும் பிளாஸ்டிக் பைகளை வழங்குவது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சிறு கடை வியாபாரிகளுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து பேரூராட்சி ஊழியர்களிடம் குப்பைகளை ஒப்படைக்க தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here