காஞ்சிபுரம், செப். 01 –

இன்று காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேல சிங்க  விநாயகர் கோவில் அமைந்துள்ள சன்னதி கருவறை முழுவதும் பதினைந்து லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு  நடைபெற்றது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு பின்பு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெறும் இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து மகிழ்வார்கள்.

அதுப்போன்று இந்த ஆண்டும் இக்கோவில் சன்னிதானத்தில் உள்ள கருவறை முழுவதும் ரூ. 15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாதாரனை நடைபெற்றது. பின் 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000, ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டன.

பின்னர் பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது.  இந்த ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்ய பட்டுள்ளதை பார்ப்பதற்கு ஏராளமாணோர் சென்றனர் இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் குப்புசாமி கூறுகையில், முதல் ஆண்டு ரூபாய் நாணயங்களால் அலங்காரம் செய்தோம். பின் ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம். இந்த ஆண்டு 18-ஆம் ஆண்டு என்பதால் நண்பர்கள் மூலம் ரூ. 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்காரம் செய்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காஞ்சிபுரத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் செல்போனில் புகைபடம் எடுத்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

பேட்டி குப்புசாமி.

காஞ்சிபுரம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here