மயிலாடுதுறை, மார்ச். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேருதல் அலுவலர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த செயல் விளக்கம் இன்று அளிக்கப்பட்டது. மேலும் அதில் 29 மண்டல அலுவலர்கள், மற்றும் 29 செக்டார் போலீசாருக்கு இ.வி.எம் எனும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் வட்டாட்சியர் இளங்கோவன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர்.

அதுப்போன்று சீர்காழி தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் 100 சதவீதம்  வாக்கு பதிவை வலியுறுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து  விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோட்டாட்சியர் அர்ச்சனா வட்டாட்சியர் இளங்கோவன் ஆகியோர் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து நர்சிங் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் என பலரும் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here