தஞ்சாவூர், மார்ச். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் தீவிர வாகன சோதனை நடைப்பெற்றது.

நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து 16 ம் தேதி பிற்பகல் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள மாவட்ட எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை அரியலூர் இடையிலான மாவட்ட எல்லையான விளாங்குடி செக்போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்ஷனா தலைமையில் இரண்டு காவல் உதவி ஆயவாளர்கள் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இரு சக்கர வாகனம், கார்,  லாரி,  ஆம்புலன்ஸ், பேருந்து ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தனர். பணம், பரிசுப் பொருட்கள். மது பானங்கள். கூடுதலான உணவுப் பொருட்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டு உள்ள பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்கிறார்களா என சோதனை நடத்தினர். மேலும் அப்போது நடைப்பெறும் வாகன சோதனைகளை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ள வீடியோ கிராபர் மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here