திருவள்ளூர், ஏப். 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுக் குறித்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவர்  கே டி. ராகவன் திருவள்ளூரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்

இந்திய தேர்தல் ஆணையம் புதிய நெறிமுறைகளை அமல்படுத்துவதாக சொல்லி இந்த தேர்தல் திருவிழாவில் சுவர் விளம்பரங்களை தடை செய்ததன் மூலம் கணிசமாக வாக்குப் பதிவுகள் குறைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக அப்போது தெரிவித்தார்.

மேலும் மத்திய அமைச்சர்  சுருதி ராணி வடசென்னை மத்திய சென்னை மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெயிலின் தாக்கத்தை கூட பொருட்படுத்தாமல் வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருவதாகவும் அதுபோல் வருகிற ஒன்பதாம் தேதி மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் திருவள்ளூர் பகுதியில் ரோடு ஷோ மூலமாக வேட்பாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்தவித சேவையும் ஆற்றவில்லை எனவும் தொகுதியின் வளர்ச்சிக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை எனவும் அப்போது குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பொன் பாலகணபதி  தொகுதி  மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவரும் திருவள்ளூர் தொகுதியின் முன்னேற்றத்திற்கு சிறந்த பணி ஆற்ற முடியும் என்பதை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருவதாகவும்  தெரிவித்த அவர்,  தேர்தல் குறித்து நாடு முழுவதும் பல கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரப் போவதாகவும் அந்த வகையில் திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியில்  பாலகணபதி வெற்றி பெற்றால் நம் தொகுதிக்கு தேவையான அனைத்து  திட்டங்களும் மிக  விரைவாக நிறைவேற்றப்படும் என்றும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகள் சென்று 100% வாக்குகளை வாக்களிக்க வேண்டும் என்றும் ஒரு முறை பாரதிய ஜனதா கட்சியின்  தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்  லோகநாதன் பாஜக மாநில செயலாளர் ஆனந்த் பிரியா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர்  அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here