தஞ்சாவூர், மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர், முன்னதாக பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்றுகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன. அதில் மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here