மதுரை, நவ. 7 –

மதுரை கிழக்கு யூனியன் ஒய். கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர் புயல் மழையின் காரணமாகவும், யானைமலை கண்மாயில் இருந்து வடிகால் வழியாக வெளியேறும் தண்ணீர் வெகு நாட்களாக தேங்கியிருப்பதால், தொற்று நோய் மற்றும் பள்ளி, வேலைக்கு செல்வோர்கள் வெளியில் செல்ல முடியாமல் வெகு சிரமத்திற்கு ஆளாகி வருவதை தம்பட்டம் நாளேட்டின் மூலமாக கடந்த அக் 27 அன்று அரசு கவனத்திற்கு எடுத்து நமது நாளேட்டின் செய்தி மூலம் சென்றோம்.

அதன்  விளைவாக இன்று ஒய். கொடிக்குளம் ஊராட்சியின் சார்பாக வெகு நாட்களாக தேங்கியிருக்கும் மழைநீரை மோட்டார் மூலம் அகற்றும் பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தங்கள் வாழ்த்துக்களை அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் குறிப்பிடுகையில் யானைமலை அடிவாரத்தில்  உள்ள  வௌவால் தோட்டம் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரை மடைமாற்றம் செய்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுத்து பாதுகாப்பு அளித்திடுமாறும் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட துறை விரைவாக எடுக்க தம்பட்டம் நாளேடு சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த அக் . 27 அன்று வெளியான செய்தி எதிரொலி

மதுரை : யானைமலை கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் :  நீரை வெளியேற்ற மக்கள் கோரிக்கை

அதன் லிங்க் ..

 https://thampattam.in/water-leaking-from-madurai-yanamalai-kanmay-risk-of-stagnant-disease-in-populated-area-people-demand-to-drain-water/

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here