காஞ்சிபுரம் செப். 13

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தெற்கு ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்  தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த 2.7.21ஆம் தேதி இடி விழுந்ததில் அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 20.8.21ல் பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருக்கோவில் தெற்கு ராஜகோபுரம் சிதிலமடைந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை கும்பகோணம் கே.தினகர் சர்மா தலைமையில் நடைப்பெற்றது. அன்றைய தினம் கோ பூஜை யாகசாலை மண்டப பூஜை மூலமந்திர ஜப ஹோமம் ஆகியன நடைபெற்றன. திங்கட்கிழமை மகா பூர்ணாஹூதி நடைபெற்று புனிதநீர் குடங்கள் கோவிலின் தெற்கு ராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் திருக்கோவில் ஸ்ரீ காரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி மேலாளர் என் சுந்தரேசன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஜெயராமன், கோயில் நிர்வாக அலுவலர் தியாகராஜன், திருக்கோவில் செயல் அலுவலர்கள் குமரன் ,வெள்ளைச்சாமி ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here