தஞ்சாவூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் இனிப்பக கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
அவருக்கு வழங்கிய தேநீர் சூடாக இருந்ததால், சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தேநீரை ஆற்றிக் கொடுத்தார். அதனை வாங்கி ஸ்டாலின் தேநீரின் சுவையை ரசித்து அருந்தினார்.
அதனால் முதலமைச்சரை காண்பதற்காக பொதுமக்கள் விரைந்து வர அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.