திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.. அதனால் முக்கியமான சந்திப்பு சாலைகளில் போதிய இடவசதியில்லாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதனைக் கருத்தில் கொண்டு, திருவாரூர் விளமல் கல் பாலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரிவு சாலையில் மின்சார வாரிய அலுவலகத்தின் அருகே ஆபத்தான வளைவு பகுதி உள்ளது.
அச்சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை நிர்வாகம் சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. இந்நிலையில்.. நேற்று நெடுஞ்சாலைத்துறை சாலை ஓர ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றியது. அப்போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், உடைபட்ட குழாயை உடனே சரி செய்து வீணாக சாலையில் செல்லும் குடிநீரை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெ அப்பகுதி வாழ் மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.