திருவள்ளூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த்செந்தில் Ex. IAS ஆதரித்து எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக வினர் இன்று கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
எதிர் வரும் ஏப் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய இந்திய கூட்டணி கட்சியான திமுகவினர் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி ஜே மூர்த்தி தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது மக்களிடையே திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனை மற்றும் 2024 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றால் மத்திய அரசின் நிதியினை பெற்று தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்ற கை சின்னத்திற்க்கு வாக்களியுங்கள் என கூறினார்.
எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி தலைமையில் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து பாலவாக்கம் ஜே.ஜே நகர் எல்லம்பேட்டை பேரண்டுர் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஏ வி ராமமூர்த்தி மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி பி ரவிக்குமார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கேவி லோகேஷ் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் க.சம்பத் ஒன்றிய பொருளாளர் ரவி மாவட்ட ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் வழக்கறிஞர் சீனிவாசன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர் வடமதுரை ஒன்றிய கவுன்சிலர் அப்புன் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் சுகன்யா மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் விமல் பெரியபாளையம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏழுமலை தொளவேடு சுந்தர் ஏழுமலை தாராட்சி ராஜேஷ் எல்லாபுரம் காங்கிரஸ் வட்டார தலைவர் சிவன் ஆச்சாரி துணைத் தலைவர் இஸ்ரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.