தஞ்சாவூர் ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது திடீரென மாட்டு வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர், மாத்தூர் கிழக்கு, மேற்கு, நல்லிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
மாத்தூர் காளியம்மன் கோவிலில் வழிப்பட்ட வேட்பாளர் சிவநேசனுக்கு கோவில் குருக்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து வாக்கு கேட்டு வந்த வேட்பாளர் சிவநேசன் மீது பெண்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து ஆட்டம் போட்டு வரவேற்பு அளித்தனர். மேலும் அந் நேரம் கூட்டத்தில் மஞ்சள் புடவை கட்டிய பெண் ஒருவர் திடீரென சாமியாட்டம் ஆடி குறி சொன்னார். அதனைத் தொடர்ந்து அப்பெணின் காலில் விழுந்து வேட்பாளர் ஆசி பெற்றார்.
கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் தப்பு இசைக்கு வைஃப் ஆகி சாலையில் புலி ஆட்டம் ஆட தொடங்கினார். வேட்பாளர் சிவநேசன் தன் உடன் வந்த கட்சி நிர்வாகிகளுக்கு இளநீர் வெட்டி கொடுத்தார்.
பின்னர் மாத்தூர் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒட்டி சென்று வாக்கு சேகரித்துக் கொண்டே வந்தார். அப்போது மாடு மிரள வண்டியில் இருந்து வேட்பாளர் தவறி கீழே விழுந்தார்.