ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கள் மூலமாகவும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக ஊராட்சி ்ளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊரணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.21.8 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், திருவாடானை வட்டம் மல்லனுார் கிராமத்திலுள்ள சேனைவயல் கண்மாயில் ரூ.88 இலட்சம் மதிப்பில்  குடிமராமத்து திட்டத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதேபோல் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் திருவாடான ஊராட்சி ஒன்றியம் சோழியக்குடி ஊராட்சியுலுள்ள அய்யனார்கோயில் ஊரணியில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலும் முத்துவடுகப்பட்டிணம் ஊராட்சியிலுள்ள வெட்டுக்குளம் ஊரணியில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஸ்டெல்லா, வட்டாட்சியர் சேகர் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here