கும்பகோணம், ஆக. 09 –

ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் ஆலயங்களிலும் இன்று காலை முதலே தரிசனத்திற்காக திரளான முருகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனுக்கு நடைப்பெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகரைக் காண அலை மோதிப்படியே கண்டுக்களித்து வருகின்றனர்.

அதன் பகுதியாக கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் ஆடி கிருத்திகை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் மாநகரம், சுவாமிமலையில் அமைந்துள்ள அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். மேலும் கட்டுமலை கோவிலான இதில், 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம், மேலும் இவ்விடத்தில்தான் தனது தந்தை சிவபெருமானுக்கே ஓம் எனும் பிரணவ மந்திரப் பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்து, சுவாமிக்கே நாதனாதலால், இங்கே முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என போற்றப்பட்டு அழைக்கப்படுகிறார்.

இத்தகு சிறப்பு மிக்க இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்திருக்கோயிலில், ஆடிக்கிருத்திகை அன்று பெரும் விழாப்போன்று, அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்று, இவ்வாண்டும், ஆடிக்கிருத்திகை முன்னிட்டு அருள்மிகு சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணையும் நடைப்பெற்றது.

மேலும், இன்று இத்திருக்கோயிலின் நடை அதிகாலையிலே திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம் வைரவேல் ஆகியவற்றுடன் அருள்பாலித்த சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அருள்மிகு சுவாமிநாதசுவாமியைக் காண முருகப்பக்தர்களின் கூட்டம் அங்கு அலைமோதியது.

தொடர்ந்து இன்றிரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் தொடர்ந்து நேத்தர புஷ்கரணியில் அழகிய பலவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு சுவாமி எழுந்தருள, தெப்போற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது என்பது மேலும் சிறப்பாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here