திருவண்ணாமலை பிப்.15-

திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமியை யட்டி இன்று 15ந் தேதி (செவ்வாய்கிழமை) மற்றும் நாளை 16ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தொடங்கியதும். நாடு முழுவதும் கடந்த 2020ம ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்தது. இதன் எதிரொலியாக  திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் 2020ம் ஆண்டு பங்குனி மாதத்திலிருந்து தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன் பிறகு கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துவிட்டதாக கூறி பவுர்ணமி கிரிவலத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு 2022ம் ஆண்டு மாசி மாத பவுர்ணமயிலும் தொடர்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் இன்று 15 ந் தேதி (செவ்வாய்கிழமை) இரவு 10.30 மணிமுதல் நாளை 16ந் தேதி (புதன்கிழமை) இரவு 11.30 மணிவரை பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலைக்கு வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here