கும்பகோணம், அக். 27 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தருமை யன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி சி.பி.எம் ஒன்றிய செயலாளர் பழனிவேல் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கு ரூபாய் 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் 100 நாள் வேலையை 200 நாட்களாக அறிவித்து தினக்கூலியாக ரூபாய் 600 வழங்கிட வேண்டும் பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலையை துவங்கிட சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் 60 வயதான அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர்.