கும்பகோணம், ஆக. 25 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய தலைவர் கலைமணி தலைமையில் விவசாயிளின் பல்வேறு கோரிக்கைகளை அரசு செய்திட வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய விளைபொருட்களான நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் சட்டப்படியான விலை வழங்க வேண்டும். விலையை தீர்மானிக்கின்ற கமிட்டியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடர்ந்து பாதுகாத்திடு வேண்டும். இடுபொருட்களான உரம், பூச்சி மருந்து, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதோடு, அரசு மானியம் வழங்கப்படவேண்டும். இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்பீட்டிற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். (பயிர் காப்பீடு) நெல் கொள்முதல் நிலையங்களை தொடர்ந்து நடத்துவதோடு அவற்றிற்கு நிரந்தர கட்டிடங்களை கட்டித்தர வேண்டும். திருப்பனந்தாளில் பருத்தி கொள்முதல் செய்வதற்கு உலர் எந்திர வசதியோடு நிரந்தர ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மின் இணைப்பு சம்பந்தமாக அரசு அறிவித்த ஒரு லட்சம் பேரில் விடுபட்ட கோயில், மடம், சாகுபடி விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும். கோவில், மடத்து நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு RTR பதிவு செய்து தர வேண்டும். கோவில், மடத்து நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டும். அனைத்து வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் தூர் வாரிட வேண்டும். சமையல் எரிவாயுவை விலை குறைப்பதோடு அரசு மானியம் வழங்கவேண்டும். பால்விலை உயர்வை குறைக்க வேண்டும். திருப்பனந்தாள் ஒன்றியம், நெய்குப்பை ஊராட்சியை  சோ்ந்த நாகனஞ்சேரி கிராமத்தில் ஆதிதிராவிடர் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும். நாகனஞ்சேரி ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு அருகில் செல்லும் வடிகால் வாய்க்காலை தூர்வாரி, வடிகால் தண்ணீர் ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் செல்லாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கரும்புக்கு உண்டான நிலுவைத் தொகையை அனைவருக்கும் உடனே வழங்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம் புலவர் கே.கே.இராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே இயக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும், ஆரூரான், அம்பிகா ஆலைகளிலும் விவசாயிகளுக்கு சம்மந்தம் இல்லாத, விவசாயிகள் மேல் வாங்கப்பட்ட கடனை அரசே. ஆலை நிர்வாகத்தை கட்ட உத்திரவு இட வேண்டும். திருமங்கைச்சேரியிலிருந்து பிரியும் வன்னிக்குடி வாய்க்காலை தூர்வார வேண்டும். திருப்பனந்தாள் ஒன்றியம் 16 உக்கரை அன்னை அம்மையப்பன் வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகி துரைராஜ் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், கொளஞ்சியப்பன், திருவள்ளுவர் விவசாயி நல சங்க செயலாளர் மாரியப்பன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில துணை செயலாளர் சுவாமிநாதன், ஒன்றிய பொருளாளர் சாமிக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here